தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

முறைகேட்டில் ஈடுபட்டதாக 4 போலீஸார் பணியிடை நீக்கம்

ஒகேனக்கல் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் ரவுத்ரி வெங்கடேசன். அதே காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் ராமச்சந்திரன். தருமபுரி நகர காவல் நிலையத்தில்

News image
Updated On :9 பிப்ரவரி 2014, 11:55 am

ராதாகிருஷ்ணன்

தருமபுரி மாவட்டத்தில், பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக ஞாயிற்றுக்கிழமை உதவி காவல் ஆய்வாளர் உள்பட நால்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒகேனக்கல் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் ரவுத்ரி வெங்கடேசன். அதே காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் ராமச்சந்திரன். தருமபுரி நகர காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (எஸ்எஸ்ஐ) மூர்த்தி மற்றும் மாரண்டஅள்ளி காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணி. இவர்கள் நால்வரும் வழக்கு விசாரணையில் ஆள் மாராட்டம் செய்வது, பணம் பெறுவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டுவந்தனராம்.இது குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ரா கார்க்கிடம் புகார்கள் வந்துள்ளது.

இதன் அடிப்படையில் போலீஸார் ரகசிய விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் நால்வரும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நால்வரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.