எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ரூ.78 லட்சம் மோசடி  புகாரிலும், வரதட்சனை கொடுமை புகாரிலும் நெல் வியாபாரி கைது

வந்தவாசியில் 17 பேரிடம் மொத்தம் ரூ.78 லட்சம் மோசடி செய்ததாக நெல் வியாபாரி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும் வரதட்சணை செய்வதாக மனைவி அளித்த புகாரின்

News image
Updated On :11 பிப்ரவரி 2014, 3:30 pm

கணேஷ்கிரி

வந்தவாசியில் 17 பேரிடம் மொத்தம் ரூ.78 லட்சம் மோசடி செய்ததாக நெல் வியாபாரி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும் வரதட்சணை செய்வதாக மனைவி அளித்த புகாரின்பேரிலும் இவர் கைது செய்யப்பட்டார்.

  வந்தவாசி மீராகாதர்ஷா தெருவைச் சேர்ந்தவர் ஷர்புதீன்(34). இவர் விவசாயிகளிடம் நெல் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வந்தார். இவர் வந்தவாசி மீனவர் தெருவைச் சேர்ந்த க.ஜெயக்குமார், அக்பர் சாலையைச் சேர்ந்த சௌகத்அலி, முகமது சாதிக், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சம்பத், புதுத் தெருவைச் சேர்ந்த சுதர்சனன், சளுக்கையைச் சேர்ந்த தங்கராஜி உள்ளிட்ட 17 பேரிடம் வியாபார செலவுக்காக மொத்தம் ரூ.78 லட்சம் கடனாக பெற்றாராம். ஆனால் பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி வந்தாராம்.  

  இதுகுறித்து புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த வந்தவாசி தெற்கு போலீஸார் ரூ.78 லட்சம் மோசடி செய்ததாக ஷர்புதீனை கைது செய்தனர்.

  மேலும் தங்களிடம் நெல் வாங்கிக் கொண்டு பணம் தராமல் ஏமாற்றி வருவதாக ஷர்புதீன் மீது விவசாயிகள் பலர் புகார் அளித்துள்ளனர். இப்புகார்கள் குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வரதட்சணை புகாரில் கைது

மேலும் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகாரின்பேரிலும் ஷர்புதீன் கைது செய்யப்பட்டார்.

  ஷர்புதீனின் மனைவி ஷர்மிளா(24). இவர்களுக்கு திருமணமாகி மூன்றரை ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு பைசல் லியாகத்(2) என்ற மகன் உள்ளார். திருமணத்தின்போது 20 சவரன் தங்கநகை, ரூ.20 ஆயிரம் பணம் ஆகியவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாம். பின்னர் கடந்த ஆண்டு மேலும் ரூ.5 லட்சத்தை வரதட்சணையாக ஷர்புதீனுக்கு, ஷர்மிளாவின் பெற்றோர் கொடுத்தனராம். இந்நிலையில் தனக்கு வியாபாரத்தில் கடனாகிவிட்டதால் மீண்டும் வரதட்சணை வாங்கி வரும்படி கூறி ஷர்மிளாவை ஷர்புதீன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தினாராம்.

  இதுகுறித்து ஷர்மிளா அளித்த புகாரின்பேரில் ஷர்புதீன், அவரது தந்தை ஷாஜகான், தாய் நபிஷா, தங்கை ஷர்மிளா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த வந்தவாசி அனைத்து மகளிர் போலீஸார் ஷர்புதீனை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.