3-ஆம் நாளாக தேமுதிகவில் வேட்பாளர் நேர்காணல்
மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு செலுத்தியவர்களிடம் பிப்.9-ஆம் தேதி முதல் விஜயகாந்த் நேர்காணல் நடத்தி வருகிறார்.


மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் 3-ஆம் நாளாக நடத்தினார்.
மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு செலுத்தியவர்களிடம் பிப்.9-ஆம் தேதி முதல் விஜயகாந்த் நேர்காணல் நடத்தி வருகிறார்.
3-ம் நாளான செவ்வாய்க்கிழமை(பிப்.11) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி (தனி), தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 10 தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது.
3 நாள்களில் மொத்தம் 30 தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்துள்ளது.
புதன்கிழமை (பிப்.12) வேலூர், ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, புதுச்சேரி ஆகிய தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறுகிறது.
நேர்காணலின்போது எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது தொடர்பாக விஜயகாந்த் கருத்து கேட்டு வருகிறார்.எனினும் விஜயகாந்த் தன் முடிவினை தேர்தல் நேரத்திலேயே தெரிவிப்பார் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...