விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செவ்வாய்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் தாய், மகன் உயிரிழந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், நல்லகுற்றாலம்புரம் தெருவைச் சேர்ந்தவர் குருசாமி. துப்புரவுத் தொழிலாளி. இவரது மனைவி காளியம்மாள் (40). இவர்களது மகன் கோவிந்தராஜ் (19).
காளியம்மாளும் கோவிந்தராஜூம், ராஜபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் துப்புரவுப் பணியாளர்களாக வேலை செய்து வந்தனர். செவ்வாய்கிழமை வேலைக்கு இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பகுதி போக்குவரத்து அலுவலகம் எதிரே மதுரை நோக்கி சென்ற லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதி கவிழந்தது. இதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் காளியம்மாள் உயிரிழந்தார்.
வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவரை கணேசனைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

