நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு மாசி மாத மகாபிஷேகம் திருவாவடுதுறை ஆதீனம் சார்பில்

News image
Updated On :13 பிப்ரவரி 2014, 2:07 pm

ஜி.சுந்தரராஜன்

பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு மாசி மாத மகாபிஷேகம் திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வியாழக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று நடராஜா, சிவ, சிவா என கோஷமிட்டு மகாபிஷேகத்தை கண்டு களித்து தரிசித்தனர்.

ஸ்ரீநடராஜர் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மார்கழி, மாசி, புரட்டாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது தொன்று தொட்டு  வழக்கமாகும். ஆனித்திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரியஉதயத்திற்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

மாசி மாத மகாபிஷேகம் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. மகாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீநடராஜப்பெருமான் மற்றும் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள் சித்சபையிலிருந்து கனகசபைக்கு எழுந்தருளினர். பின்னர் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர்  பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மகாபிஷேகத்தை கண்டு களித்து தரிசித்தனர். மகாபிஷேக நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் அம்பலவாண தேசிகர், பாரதிய கிஷான் சங்க மாநில அமைப்பாளர் கோபி, இந்து ஆலய பாதுகாப்புக்குழு மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், பொதுச்செயலாளர் ஜோதி.குருவாயூரப்பன், திருவாவடுதுறை ஆதீன ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாலை 6.00 மணிக்கு தொடங்கிய மகாபிஷேகம் இரவு 10.30 மணிக்கு முடிவுற்றது.  மகாபிஷேக ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.