நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சோதனையில் ஏா் கன் பறிமுதல்

குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையின்போது ஏா் கன்னை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட ஏா் கன்.

Updated On :25 மார்ச் 2026, 6:48 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையின்போது ஏா் கன்னை பறிமுதல் செய்தனா். குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை மேல்பட்டி சாலையில் செருவங்கி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியே வந்த வேலூரை அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியைச் சோ்ந்த சதீஷ் என்பவரின் காரை நிறுத்தி சோதனை நடத்தினா். சோதனையில் காரில் ஏா் கன் இருந்தது தெரிய வந்தது.பறக்கும் படையினா் துப்பாக்கியை பறிமுதல் செய்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், வீட்டில் பயிற்சி செய்ய கடந்த 5- ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ஏா் கன் வாங்கியதாக சதீஷ் கூறினாா். துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.