நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

விடுபட்டவர்களுக்கு மிக்சி, கிரைண்டர் வழங்கக் கோரி சிதம்பரத்தில் சாலைமறியல்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சியைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த பிப்.14-ம்தேதி ஓமக்குளம் சுபம் திருமண மண்டபத்தில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், ஃபேன்

News image
Updated On :16 பிப்ரவரி 2014, 1:03 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே விடுபட்டவர்கள் அனைவருக்கும் விலையில்லா மிக்சி, கிரைண்டர் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் மண்டபத்தை பூட்டி சாலைமறியலில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சியைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த பிப்.14-ம்தேதி ஓமக்குளம் சுபம் திருமண மண்டபத்தில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், ஃபேன் வழங்கும் நிகழ்ச்சி வட்டாட்சியர் விஜயா, குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. இருநாட்களாக விலையில்லா மிக்சி, கிரைண்டர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொன்னாங்கன்னிமேடு, ஓமக்களும் பகுதியைச் சேர்ந்த மக்கள் விடுபட்ட தங்களுக்கும் மிக்சி, கிரைண்டர், ஃபேன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை காலை விலையில்லா பொருள்கள் வழங்கி வரும் திருமண மண்டபத்தை பூட்டி, சிதம்பரம்-காட்டுமன்னார்கோயில் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த சிதம்பரம் தாலுக்கா போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று வருவாய்த்துறையினர் பேசி ஒருவாரத்திற்குள் விலையில்லா மிக்சி, கிரைண்டர், ஃபேன் ஆகியவற்றை வழங்குவதாக தெரிவித்ததை அடுத்து மக்கள் மறியலை வாபஸ் பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.