இதுகுறித்து அக்கட்சி மாநில பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிரகாரித்தது செல்லாது என்று அறிவித்த உச்சநீதிமன்றம், இம்மூவரின் மரணதண்டனையை ரத்து செய்து வாழ்நாள் தண்டனையாக குறைந்து அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் மற்றும் சிவகீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு அளித்துள்ள இத்தீர்ப்பு நீதிக்கும், மனித உரிமைகளுக்கும் கிடைத்துள்ள முதல் வெற்றியாகும்.