சிதம்பரம் அருகே உள்ள திருநாரையூர் ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார் கோயிலில் அப்பர் தொண்டு நிறுவனத்தின் நூறாவது உழவாரப்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தொண்டு நிறுவன நிர்வாகிகள் என்.காளிதாஸ், ஜோதிமகாலிங்கம், சுப்ரமணியன், நளினி, கண்ணன், அமுதா, வெங்கடாஜலம் உள்ளிட்ட 80 சிவனடியார்கள் பங்கேற்று கோயில் வளாகத்தில் உள்ள முட்புதர்கள், செடி, கொடிகளை அகற்றினர். மேலும் கோயில் வளாகம் முழுவதும் நீரினால் கழுவி சுத்தம் செய்தனர். பின்னர் சிவபூஜையும், திருமுற்றோதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை, சொற்பொழிவு, மாகேஸ்வரபூஜை ஆகியவை நடத்தப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. உழவாரப்பணி ஏற்பாடுகளை அப்பர் தொண்டு நிறுவன செயலாளர் வி.சந்திரசேகரன் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

