120 திருட்டு வழக்குகளில் தேடப்பட்ட சென்னையைச் சேர்ந்த நபர் காரைக்காலில் கைது
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சுமார் 120 திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பலே திருடனை காரைக்காலில் போலீஸார் கைது செய்தனர்.


தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சுமார் 120 திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பலே திருடனை காரைக்காலில் போலீஸார் கைது செய்தனர்.
காரைக்கால் கே.எம்.ஜி. நகரை சேர்ந்த எம்.என்.சண்முகம் என்பவரது வீட்டில் வெள்ளிக்கிழமை புகுந்து ஒருவர் திருட முயற்சித்துள்ளார். இதனை அறிந்த அவரும், சிலரும் சேர்ந்து திருட முயற்சித்த நபரை விரட்டிப் பிடித்து காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், சென்னை, நத்தம்வாக்கம், சக்தி நகரை சேர்ந்த முகமது யூசுப் மகன் நாகூர் பிச்சை என்கிற சாகுல்ஹமீது (54) என தெரிவித்துள்ளார்.
இவரிடம் நடத்திய விசாரணையில், காரைக்கால் நேரு நகரில் கடந்த ஜனவரி மாதம் கமல்பாட்ஷா என்பவரது வீட்டிலும், பிப்ரவரி மாதம் காரைக்கால் செல்வம் என்பவரது வீட்டிலும் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் தாம் சிறு வயது முதல் திருட்டு செயலில் ஈடுபட்டுவருவதும், வீட்டில் யாரும் இருக்கும்போதே புகுந்து திருடுவது வழக்கம் எனவும், இதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திருடியதன் பேரில் 120 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
காரைக்கால் பகுதியில் திருடிய நகைகளில், 15 பவுன் நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரொக்கத்தை போலீஸார் இவரிடமிருந்து கைப்பற்றியுள்ளனர். மேலும் 36 பவுன் நகைகள் கைப்பற்றவேண்டியுள்ளதாக போலீஸார் கூறினர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணி்ப்பாளர் வெங்கடசாமி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை மேலும் கூறியது : கைது செய்யப்பட்ட நாகூர் பிச்சையிடமிருந்து கைப்பற்றிய நகைகள் மட்டுமல்லாது காரைக்காலில் திருடப்பட்டிருக்கும் கூடுதல் நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதற்காக அவரை காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் பகுதியில் இவர் முந்திரி வியாபாரம் செய்வதுபோல நடித்துக்கொண்டு, திருடுவதை பிரதானமாக செய்துவந்துள்ளார். இவரிடம் காவல்துறையினர் தீவிரமான விசாரணையில் ஈட்பட்டுள்ளனர். பல வழக்குகளில் இவர் தண்டனை பெற்றுள்ளார். பல வழக்குகளில் தேடப்படும் நபராக இருக்கிறார். புதுச்சேரியில் சுல்தான்பேட், வில்லியனூரிலும் இவர் பல இடங்களில் திருடியது தெரியவந்துள்ளது. இந்த நபரிடம் விசாரணை நடத்தி, பொருள்களை கைப்பற்றிய காவல்துறையின் குழுவினரை பாராட்டுவதாக அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...