தமிழக முதல்வர் ஜெயலலிதா 66-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர அதிமுக சார்பில் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் சிறப்பு அர்ச்சனை மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது.
சிதம்பரம் நகர அதிமுக சார்பில் நடராஜர் கோயிலில் முதல்வர் ஜெயலலிதா நீண்ட ஆயுள் பெற்று பல்லாண்டு வாழ்ந்திட வேண்டி முதல்வர் பெயரில் சிறப்பு அர்ச்சனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. பிரசாதத்தை கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத் தலைவர் ஏ.அருண்மொழிதேவனிடம், சிவராமதீட்சிதர் வழங்கினார்.
சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில், கீழத்தெரு மாரியம்மன் கோயில், மந்தகரை நாககன்னி அம்மன் கோயில், ஸ்ரீஆரணி மாரியம்மன் கோயில், ஸ்ரீமகாமுத்து மாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றன. மானாசந்து நகராட்சி நடுநிலைப்பள்ளி, கொத்தங்குடித்தெரு நகராட்சி பள்ளி ஆகியவற்றில் ஏழை-எளிய மாணவர்களுக்கு இலவச நோட்டு, பேனா வழங்கப்பட்டன.
அரசு மருத்துவமனையில் 66 பேர் ரத்ததானமும், 66 பேர் கண்தான உறுதிமொழியும் வழங்கினர். மாற்றுத்திறனாளி மூவருக்கு இலவச மூன்று சக்கர சைக்கிள்கள் மற்றும் சலவைப் பெட்டிகள், தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. 33 வார்டுகளிலும் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்விராமஜெயம் (புவனகிரி), நாக.முருகுமாறன் (காட்டுமன்னார்கோயில்), மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சொ.ஜவகர், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன், நகர அவைத்தலைவர் எம்.யேசுராஜ், நகர துணைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், தொகுதி இணைச் செயலாளர் சி.கே.சுரேஷ்பாபு, தில்லை ஏ.கே.எஸ்.சேகர், நகர பேரவை செயலாளர் பன்னீர்செல்வம், வழக்குரைஞர் ஞானசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


