நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த 8 அடி நீள முதலை!

சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய 8 அடி நீள முதலையை வனத்துறையினர் பிடித்து, அருகாமையில் உள்ள நீர்தேக்க குளத்தில் விட்டனர்.

News image
Updated On :26 பிப்ரவரி 2014, 10:55 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய 8 அடி நீள முதலையை வனத்துறையினர் பிடித்து, அருகாமையில் உள்ள நீர்தேக்க குளத்தில் விட்டனர்.

சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஊருக்குள் முதலை ஒன்று புகுந்தது. இதனை பார்த்த ஊர்மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சிதம்பரம் வனச்சரக அலுவலர் எல்.ரவிக்குமார் தலைமையில் வனக்காப்பாளர்கள் எம்.ராஜேஷ்குமார், டி.பழனிவேல் மற்றும் களப்பணியாளர்கள் விரைந்து சென்று முதலையை பிடிக்க முயன்றனர். முதலை 8 அடி நீளமும், 200 கிலோ எடையுடன் இருந்ததால், மிகவும் ஆக்ரோஷத்துடன் அச்சுறுத்தியது.

பின்னர் கடலூரைச் சேர்ந்த வன ஆர்வலர் பூனம்சந்த் மற்றும் முதலை பிடிக்கு நந்திமங்கலம் ராஜூ குழுவினரை வரவழைத்து நள்ளிரவு 1 மணி முதல் போராடி காலை 6 மணிக்கு முதலையை பிடித்து கட்டிப்போட்டனர். பின்னர் முதலையை சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குடிநீர் தேக்க குளத்தில் கொண்டு பாதுகாப்பாக விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.