நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நடராஜர் கோயிலில் 33-வது நாட்டியாஞ்சலி நாளை தொடக்கம்!

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நடனக் கலைஞர்கள் தங்களது நாட்டியத்தை ஆடல்வல்லான் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு அஞ்சலி செலுத்தும் விழாவான 33-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா

News image
Updated On :26 பிப்ரவரி 2014, 10:37 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நடனக் கலைஞர்கள் தங்களது நாட்டியத்தை ஆடல்வல்லான் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு அஞ்சலி செலுத்தும் விழாவான 33-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா மகாசிவராத்திரியான நாளை (பிப்.27) வியாழக்கிழமை மாலை தொடங்குகிறது. நாட்டியாஞ்சலி விழா தொடர்ந்து மார்ச்.3-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

நாட்டியாஞ்சலி வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. தொடக்கவிழா மாலை 7.45 மணிக்கு நடைபெறுகிறது. எஸ்.எஸ்.சிவக்குமார் தீட்சிதர் தலைமை வகிக்கிறார். பொதுதீட்சிதர்களின் செயலாளர் எம்.காசிராஜ தீட்சிதர் முன்னிலை வகிக்கிறார். நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் வழக்குரைஞர் ஏ.கே.நடராஜன் வரவேற்கிறார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தொடங்கி வைத்துப் பேசுகிறார்.

விழா ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் வழக்குரைஞர் ஏ.கே.நடராஜன், துணைத் தலைவர்கள் கே.சுவாமிநாதன், செயலாளர்கள் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம், ஆர்.நாகசாமி, இணைச் செயலாளர் ஆர்.நடராஜன், பொருளாளர் எஸ்.ஆர்.ராமநாதன், உறுப்பினர்கள் ஆர்.கே.கணபதி, டாக்டர் ஆர்.முத்துகுமரன், வி.பாலதண்டாயுதம், ஆர்.சபாநாயகம் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

நாட்டியாஞ்சலியில் நாளை....

நடராஜர் கோயில் நாட்டியாஞ்சலி விழாவில் வியாழக்கிழமை (பிப்.27) பங்கேற்கும் நடனக் கலைஞர்கள் விபரம் (மாலை 5.30 மணி முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.00 மணி வரை): ஜே.இந்துமாலினி, அனுஷியா ஹரிராஜன்,  அண்ணாமலைப் பல்கலைக்கழக கவின் கலைத்துறை மாணவர்கள், யுஎஸ்ஏ பத்மாராணி ராசையா கண்ட்டு, டாக்டர் பத்மாசுப்பிரமணியம். ஊர்மிளா சத்யநாராயணன் மற்றும் அவரது மாணவியர்கள், புதுதில்லி நவ்தேஜ்சிங் ஹோஹர், திருநங்கை நர்த்தரி நடராஜ், ஆகியோரின் பரதம், யு.எஸ்.ஏ நளினி பிரகாஷ் மற்றும் விஜய்பாலபர்த்தி ஆகியோரின் அர்த்தநாரீஸ்வரம் நடனம்,

புதுதில்லி கீதாசந்திரன், பெங்களூர் பத்மாலயா நாட்டியப்பள்ளி மாணவியர்கள், புனே நிருத்ய பிரேரணா மாணவியர்கள், மும்பை ரூபக் மேத்தா, மும்பை நிருத்ய கலாநிகேதன் மாணவியர்கள், மும்பை பிராச்சி சாத்தி, பெங்களூர் த்வனி ராஜேஸ்வரி, சென்னை வழூவூரார் ஆர்ட்ஸ் அகாதெமி டாக்டர் மகாலட்சுமி பக்தவத்சலம், கமலா கற்பகவல்லி, மாளவிகா குமரன், பெங்களூர் ரக்ட்சிதா பிரசாத், சென்னை எஸ்.அர்ச்சனா, சென்னை எம்.செந்தில்குமார், மலேசியா நிருத்ய நடனாஞ்சலி சித்திரை மற்றும் மாணவியர்கள், ஐய்வர்யா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் பரதம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.