தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

போர் நிதிக்காக வைர, தங்க நகைகளை அளித்தவர் ஜெயலலிதா : ஏ.அருண்மொழிதேவன்

1965ல் ஒட்டுமொத்த தமிழக மக்கள் அன்பை பெற்ற முன்னணி நடிகையாக ஜெயலலிதா இருந்தபோது சீனப்போர், பாகிஸ்போர் வந்தது. அப்போது தமிழகத்திற்கு வந்த பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் வெள்ளி தாம்பாளத்தில் தனது வைர, தங்க நகைகளை வைத்து போருக்கான நிதியாக அளித்தார். அதோடு மட்டுமல்லாமல் கையில் போட்டிருந்த வளையலையும்

News image
Updated On :26 பிப்ரவரி 2014, 6:35 am

1965ல் ஒட்டுமொத்த தமிழக மக்கள் அன்பை பெற்ற முன்னணி நடிகையாக ஜெயலலிதா இருந்தபோது சீனப்போர், பாகிஸ்போர் வந்தது. அப்போது தமிழகத்திற்கு வந்த பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் வெள்ளி தாம்பாளத்தில் தனது வைர, தங்க நகைகளை வைத்து போருக்கான நிதியாக அளித்தார். அதோடு மட்டுமல்லாமல் கையில் போட்டிருந்த வளையலையும் அளித்தார். ஜெயலலிதாவின் தேசப்பற்றிற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை என கடலூர் மேற்கு மாவட்டச் செயலரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத் தலைவரும், கடலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான ஏ.அருண்மொழிதேவன் தெரிவித்தார்.

சிதம்பரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா 66-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் தலைமை வகித்தார். நகர பேரவைச் செயலாளர் கே.பன்னீர்செல்வம் வரவேற்றார். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சொ.ஜவகர், தொகுதி இணைச் செயலாளர் சி.கே.சுரேஷ்பாபு, நகர அவைத் தலைவர் எம்.யேசுராஜ், துணைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகரமன்ற துணைத் தலைவர் ரா.செந்தில்குமார் தொடக்கவுரையாற்றினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத் தலைவர் ஏ.அருண்மொழிதேவன் பங்கேற்று பேசியது: முதல்வர் ஜெயலலிதா 40 தொகுதி வேட்பாளர்கள் பெயரை அறிவித்துள்ளார். கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பின்னர் அத்தொகுதி வேட்பாளர்கள் வாபஸ் பெறுவார்கள். ராணுவ கட்டுப்பாடு கொண்ட இயக்கம் அதிமுக.

மத்தியஅரசிற்கு மக்கள் மீது அக்கறை இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, தீவிரவாதம், பயங்கரவாதம், ஊழல் ஏற்பட்டுள்ளது. தேசப்பற்று, நாட்டுப்பற்று இல்லை. சிறுநாடுகள் கூட இந்தியாவை அச்சுறுத்தும் நிலை உள்ளது. எனவே இந்தியாவின் இறையாண்மை காப்பாற்றப்பட வேண்டுமென்றால், தமிழக உரிமைகள் மீட்கப்படவேண்டுமென்றால் வீரமிக்க, விவேகமிக்க, தேசப்பற்றுமிக்க, மக்கள் மீது அக்கரை கொண்ட ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும் என தேவகவுடா, பரதன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் விரும்புகிறார்கள்.

வரும் தேர்தலில் ஜாதி கட்சிகள் மக்களை தேடி வருவார்கள். அவர்களால் எவ்வித பிரயோஜனமும் இல்லை. அக்கட்சிகளைச் சேர்ந்த ஜாதியினரும், இளைஞர்களும் வழக்குகளில் சிக்கி வேலைவாய்பை இழந்து நிற்கின்றனர் என ஏ.அருண்மொழிதேவன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.