நெல்லையில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
வருவாய்துறையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஐந்து ஆண்டுகளில் 50 சதவிகிதம் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில்


வருவாய்துறையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஐந்து ஆண்டுகளில் 50 சதவிகிதம் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வருவாய்த்துறையில் கிராம நிர்வாக அலுவலரை ஆரம்பப் பணியாளராக நியமனம் செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஐந்து ஆண்டுகளில் 50 சதவிகிதம் பதவி உயர்வு வழங்க வேண்டும். 2011 ஆம் ஆண்டு வேலை நிறுத்த காலத்தை விடுப்பாக அனுமதிக்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.கிராம உதவியாளர்களுக்கு தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.இலவச வேட்டி, சேலைகளை எடுத்து செல்லும் செலவுத் தொகை, பயனாளிகளை இணைய தளத்தில் பதிவு செய்யக் கட்டணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் கே. சண்முகசுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கே. முருகன், மாவட்ட அமைப்புச் செயலர் ஜெ. பன்னீர்செல்வன், மாவட்ட இணைச் செயலர் என். முகம்மதுஅப்துல்அலி, துணைச் செயலர் என்.வி. நாராயணன், அமைப்பின் மாநில துணைத் தலைவர் எம். ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளர் பி. பாலசுப்பிரமணியன் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...