தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

அண்ணாமலைப் பல்கலையில் 12 ஆயிரம் ஊழியர்களுக்கு பயோ மெட்ர்க் அடையாள அட்டை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்று 12 ஆயிரம் ஊழியர்களுக்கு புதிய பயோ மெட்ரிக் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை தலைமை நிலைய ஊழியர்களுக்கு

News image
Updated On :1 ஜனவரி 2014, 11:41 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்று 12 ஆயிரம் ஊழியர்களுக்கு புதிய பயோ மெட்ரிக் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை தலைமை நிலைய ஊழியர்களுக்கு பயோ மெட்ரிக் அடையாள அட்டைகள் வழங்கும் பணியை நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தொடங்கி வைத்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் 2013 முதல் தமிழகஅரசு முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழகத்தில் பணியாற்று 12 ஆயிரம் ஊழியர்களுக்கு புதிய பயோ மெட்ரிக் அடையாள அட்டை வழங்குவதற்காக புகைப்படம் மற்றும் விரல் ரேகை பதிவுகள் எடுக்கப்பட்டு நிறைவு பெற்று பயோ மெட்ரிக் தகவல் தொகுத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது கட்டமாக புதிய பயோ மெட்ரிக் அடையாள அட்டைகள் ஊழியர்களுக்கு வழங்கும் பணியும், அட்டையை உபயோகித்து வருகையை பதிவு செய்யும் முறையையும் பல்கலைக்கழக நிர்வாக அலுவலக கட்டடத்தில் தமிழகஅரசு முதன்மைச் செயலரும், பல்கலைக்கழக நிர்வாகியுமான ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக தலைமை நிலைய ஊழியர்கள் 74 பேருக்கு ஷிவ்தாஸ்மீனா பயோ மெட்ரிக் அடையாள அட்டைகளை வழங்கினார். மீதமுள்ள ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு மாதத்தில் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பதிவாளர் என்.பஞ்சநதகம், மாவட்ட வருவாய் அலுவலர் டி.கிருஸ்துராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.