சிதம்பரம் அருகே சாமியார்பேட்டை கடலில் வியாழக்கிழமை அதிகாலை படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் இறந்தார். மூவர் காயமுற்றனர். சம்பவ இடத்திற்கு கே.பாலகிருஷ்ணன் உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்.
சிதம்பரம் அருகே சாமியார்பேட்டை பகுதி மீனவர்கள் நடராஜன், வரதப்பிள்ளை, ஏழுமலை, ரவி ஆகிய நால்வரும் ஒரு படகில் வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். சுமார் 150 மீட்டர் தூரத்தில் அலையின் சீற்றத்தில் படகு கவிழ்ந்தது. இதில் நடராஜன் (55) நீரில் மூழ்கி இறந்தார். மீதமுள்ள மூவரும் காயங்களுடன் கரையேறினர். அப்போது சிதம்பரத்திலிருந்து அவ்வழியே சென்னை சென்று கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று உடனடியாக சென்று மாவட்ட நிர்வாகம் மற்றும் காவத்துறையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து காயமுற்றவர்களை மீட்டு பரங்கிப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்.
பின்னர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ பரங்கிப்பேட்டையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூவரையும் பார்த்து ஆறுதல் தெரிவித்தார். இறந்த மீனவர் குடும்த்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ கோரிக்கை பின்னர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ செய்தியாளர்களிடையே தெரிவித்தது:
சிதம்பரம் அருகே கிள்ளை, பரங்கிப்பேட்டை பகுதியில் தொடர்ந்து கடல் அலை சீற்றத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்துள்ளனர். எனவே சாமியார்பேட்டை பகுதியில் கடலில் சிக்கும் மீனவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நிரந்தரமாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தவும், இறந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சமும், காயமுற்றவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகு மற்றும் வலை ஆகியவற்றை முதல்வரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்க வேண்டும். இதுகுறித்து முதல்வருக்கு கடிதம் அனுப்ப உள்ளேன் என கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி!

3 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழை

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

