அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகரில் வயிற்று வலி பிரச்னையால் தீக்குளித்தவர் சாவு

விருதுநகர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் சுப்பாராஜ்(47). இவர் வயிற்று வலி பிரச்னையால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும்

Updated On :2 ஜனவரி 2014, 9:51 am

விருதுநகரில் வயிற்று வலி பிரச்னையால் தீக்குளித்தவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

    விருதுநகர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் சுப்பாராஜ்(47). இவர் வயிற்று வலி பிரச்னையால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் தீராவில்லையாம். இதனால் கவலையடைந்த சுப்பாராஜ் கடந்த செவ்வாய்கிழமை மனைவி மகன் ஆகியோர் வெளியே சென்றிருந்த சமயத்தில் திடீரென தனக்கு தானே சமையலுக்கு வைத்திருந்த மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தாராம்.

    இதில் பலத்த காயம் அடைந்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார்களாம். அங்கு தீவீர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மகன் ராஜபெருமாள் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.