விருதுநகரில் காவல் துறையில் பணியாற்றுவர்கிறவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையும்-மாவட்ட காவல் துறையும் இணைந்து சூலக்கரை ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான மன அழுத்தத்தை குறைப்பதற்கான பயிற்சி முகாமை நடத்தியது. விருதுநகர் அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவர் மோகன் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். அதில், காவலர்கள் மன அழுத்தத்தை எப்படி குறைக்க வேண்டும். அதனால் என்னென்ன உடல் பாதிப்புகள் ஏற்படும். அதற்கு என்னென்ன பாதுகாப்பான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.
அதோடு, சாலை பாதுகாப்பு விதிமுறைகள் எவ்வாறு பின்பற்ற வேண்டும். விபத்துக்களில் காயம் அடைந்தவர்களுக்கு என்னமாதிரியான முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டன. இப்பயிற்சி முகாமில் காவலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
தொகுதி நிலவரம்- சேலம் மேற்கு! நான்குமுனைப் போட்டியால் விசிலடிக்கும் வேட்பாளா்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

