நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிரான்ஸ் உள்ளாட்சித் தேர்தல்:  பிரெஞ்ச் நலச்சங்கம் போட்டி

பிரெஞ்ச் குடிமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான தேர்தலில் வெளிநாடு வாழ் பிரெஞ்ச் குடியிருப்போர் நலச்சங்கம் போட்டியிட உள்ளது.இதுகுறித்து அந்தச்

News image
Updated On :2 ஜனவரி 2014, 10:17 am

சுஜித்குமார்

பிரெஞ்ச் குடிமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான தேர்தலில் வெளிநாடு வாழ் பிரெஞ்ச் குடியிருப்போர் நலச்சங்கம் போட்டியிட உள்ளது.இதுகுறித்து அந்தச் சங்கத் தலைவர் பிரதீபன் சிவா புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:

பிரெஞ்ச் குடிமக்கள் சபையின் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான தேர்தல் வரும் மே 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான முறையான அறிவிப்பு வரும் மார்ச் மாதம் பிரான்ஸ் அரசு வெளியிடும். இந்தத் தேர்தலில் வெற்றி பெறும் பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.

பாண்டிச்சேரி தொகுதியில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம், சென்னை, ஆரோவில் ஆகிய இடங்களில் வசிக்கும் பிரெஞ்ச் குடியுரிமை பெற்ற மக்கள் சுமார் 6,500 பேர் இந்தத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

புதுச்சேரி தொகுதிக்கு உண்டான மூன்று இடங்களுக்கு எங்கள் சங்கம் மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணி சார்பில் பிரதீபன் சிவா, லூர்து லூயி, பைரன் சாலமன், கனக கோவிந்தசாமி, அசோகன் வளவன், கமிலி அலோஷன் ஆகிய 6 பேர் போட்டியிட உள்ளோம்.

பிரெஞ்ச் குடியுரிமை பெற்ற மக்களின் அடிப்படை பிரச்னைகளை, பிரான்ஸ் அரசு கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்ற எங்களை வெற்றி பெற வைக்க மக்கள் முன்வர வேண்டும் என்றார் சிவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.