அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

ஆசிரியர் பயிற்சி பட்டய தேர்வு முடிவு 6-ம் தேதி வெளியாகிறது

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தில் ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வு எழுதியவர்களுக்கு வருகிற 6-ம் தேதி முடிவு வெளியிடப்படுகிறது. அன்றைய

Updated On :3 ஜனவரி 2014, 12:13 pm

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தில் ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வு எழுதியவர்களுக்கு வருகிற 6-ம் தேதி முடிவு வெளியிடப்படுகிறது. அன்றைய நாளிலேயே மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்பட இருக்கிறது.

   இது குறித்து பாலையம்பட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தின் முதல்வர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தில் பயின்று வரும் முதல், இரண்டாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கும், தனித்தேர்வர்களுக்கும் தொடக்க கல்வி பட்டயத் தேர்வு கடந்த ஜீன்-2013ல் நடைபெற்றது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள் வருகிற வருகிற 6-ம் தேதி விநியோகப்பட இருக்கிறது.

   இம்மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு அந்தந்த நிலையங்களில் மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக் கொள்ளலாம். அந்தந்த பயிற்சி நிலையங்களிலேயே கணினி பயிற்சி பெற்ற அலுவலர்கள் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவும் மேற்கொள்ளப்பட இருக்கிறது. மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கூட்டத்தை தவிர்க்கும் வகையில், மதிப்பெண் சான்றிதழ் பெற்றவுடன் தனியாகவோ, இணைய தள மையங்களிலோ பதிவு செய்து கொள்ளலாம் என முதல்வர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.