தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஒன்றியக்குழு கூட்டத்திற்கு வாயில் கறுப்புத்துணியுடன் வந்த உறுப்பினரால் பரபரப்பு

சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டத்திற்கு உறுப்பினர் ஒருவர் நாமம் போட்டுக்கொண்டும், வாயில் கறுப்பு துணி கட்டிக்கொண்டு தரையில் அமர்ந்து

News image
Updated On :3 ஜனவரி 2014, 1:41 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டத்திற்கு உறுப்பினர் ஒருவர் நாமம் போட்டுக்கொண்டும், வாயில் கறுப்பு துணி கட்டிக்கொண்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள  கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுக் கூட்டம் தலைவர் வி.ஆர்.ஜெயபாலன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னதாக தனது வார்டில் சாலை போதுவதாக கூறி, சாலை அமைக்காமல் தலைவர் பணத்தை எடுதத்துக் கொண்டார் என்றும், தனது ஒப்பந்தப்பணிகள் தருவதில்லை என குற்றம்சாட்டி சாக்காங்குடியைச் சேர்ந்த 18-வது வார்டு கவுன்சிலர் அன்பழகன் நெற்றியில் நாமத்துடன், வாயில் கறுப்புத்துணி கட்டிக் கொண்டு வந்து கூட்ட அறை முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சக உறுப்பினர்கள் தலைவர் உனது வார்டுக்கு செய்துள்ள பணிகளை பற்றி எடுத்துக் கூறி அவரை சமாதானப்படுத்தியதை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

பொய் புகார்: ஒன்றியக்குழுத் தலைவர் விளக்கம்.

கீரப்பாளையம் ஒன்றியக்குழுத் தலைவர் வி.ஆர்.ஜெயபாலன் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தது: கவுன்சிலர் அன்பழகன் பாமகவிலிருந்து சமீபத்தில் அதிமுகவிற்கு வந்தவர். பல்வேறு ஒப்பந்தப்பணிகளுக்கு கமிஷன் வேண்டும் என்னிடம் பலமுறை கேட்டு தொந்தரவு செய்து வந்தார். கமிஷன் கொடுக்காததால் என் மீது பொய் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என வி.ஆர்.ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.