தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

4 மாநில தேர்தலில் தோல்வியுற்றும் மத்தியஅரசு கவலைப்படவில்லை: மார்க்சிஸ்ட் கம்யூ

பெட்ரோல், டீசல் உயர்த்தியதற்கு 4 மாநிலங்களில் தேர்தலில் தோல்வியுற்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மக்களை பற்றி கவலைப்படவில்லை என்பது தெரிகிறது என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மத்தியக்குழு

News image
Updated On :4 ஜனவரி 2014, 12:41 pm

ஜி.சுந்தரராஜன்

பெட்ரோல், டீசல் உயர்த்தியதற்கு 4 மாநிலங்களில் தேர்தலில் தோல்வியுற்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மக்களை பற்றி கவலைப்படவில்லை என்பது தெரிகிறது என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மத்தியக்குழு உறுப்பினரும், சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் (படம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது:

பன்னாட்டு நிறுவனங்களும், எண்ணெய் நிறுவனங்களும் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதில் மத்தியஅரசு ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக ஏழை, எளிய மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது பற்றி கவலைப்படவில்லை. மேலும் நினைத்த நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை ஏற்ற அந்நிறுவனங்களுக்கு மத்தியஅரரசு அனுமதி வழங்கியுள்ளது கண்டனத்திற்குரியது. வருடத்தில் பல முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடும் விலைவாசி உயர்விற்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான் காராணம்.

தற்போரு மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஹோட்டல் உள்ளிட்ட பலர் தொழில் நடத்த முடியாமல் அவதியுற்றுள்ளனர். ஆதார் அட்டை இருந்தால்தான் வீட்டு சமையல் கேஸ் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுவரை பாதிபேருக்கு ஆதார் அட்டை வழங்கப்படவில்லை. எனக்கே இதுவரை ஆதார் அட்டை வழங்கப்படவில்லை என கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.