இந்திய கடல் பகுதிக்குள் அனுமதியின்றி ஆயுதங்களுடன் நுழைந்ததாக கடந்த அக்டோபர் மாதம் 12-ம் தேதி அமெரிக்காவின் அட்வன்போர்ட் என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான சீ மேன் கார்டு ஓகியோ ஆயுதக் கப்பலை கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்தனர்.மேலும், கப்பலில் இருந்த 25 பாதுகாப்பு வீரர்கள், கேப்டன் உள்பட 10 மாலுமிகள் ஆகிய 35 பேரையும் கைது செய்த க்யூ பிரிவு போலீஸôர் கப்பலில் இருந்த 35 அதிநவீன துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். இந்திய கடல் பகுதிக்குள் அனுமதியின்றி ஆயுதங்களுடன் நுழைந்தது தொடர்பாகவும், மீனவர்களிடம் திருட்டுத்தனமான 1500 லிட்டர் டீசல் வாங்கியதாகவும் 35 பேரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.