மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மதுரை மாவட்டத்தில் தூரல் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டம் முழுவதும் இன்று காலை சாரல் மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News image
Updated On :8 ஜனவரி 2014, 7:09 am

தர்மராஜ்

மதுரை மாவட்டம் முழுவதும் இன்று காலை சாரல் மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில்  ஒரு போக சாகுபடி பகுதியில் 15 ஆயிரம் ஏக்கரில்  நடவு செய்யபப்பட்டுள்ள நெல் பயிர் கதிர் விளையும் தருணத்தில் தண்ணீர் இன்றி கருகும் நிலையில் உள்ளது. எனவே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பயிர்களை காப்பாற்ற ஒரு முறை தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர்.

எனினும் பெரியாறு, வைகை அணையில் குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதால் தற்போது நீர் திறக்க இயலாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.  எனினும்  விவாசாயிகள் தரப்பில் விசாரித்து ஓரிரு நாட்களில் தண்ணீர் திறக்க இன்று டிவிஷன் பெஞ்ச் முடிவு செய்யும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மதுரை மாவட்டத்தில் இன்று காலையில் இருந்தே  தூரல் மழை பெய்து வருகிறது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.