மதுரை மாவட்டத்தில் தூரல் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
மதுரை மாவட்டம் முழுவதும் இன்று காலை சாரல் மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மதுரை மாவட்டம் முழுவதும் இன்று காலை சாரல் மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் ஒரு போக சாகுபடி பகுதியில் 15 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யபப்பட்டுள்ள நெல் பயிர் கதிர் விளையும் தருணத்தில் தண்ணீர் இன்றி கருகும் நிலையில் உள்ளது. எனவே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பயிர்களை காப்பாற்ற ஒரு முறை தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர்.
எனினும் பெரியாறு, வைகை அணையில் குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதால் தற்போது நீர் திறக்க இயலாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர். எனினும் விவாசாயிகள் தரப்பில் விசாரித்து ஓரிரு நாட்களில் தண்ணீர் திறக்க இன்று டிவிஷன் பெஞ்ச் முடிவு செய்யும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மதுரை மாவட்டத்தில் இன்று காலையில் இருந்தே தூரல் மழை பெய்து வருகிறது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...