6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேலூரில் ஜவுளிகடை குடோனில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

மதுரை மாவட்டம் மேலூர் தெக்கடி பஜாரில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு ஜவுளிக்கடையின் கிடங்கு திருவாதவூர் ரோட்டில் உள்ளது இன்று காலை அந்த கிடங்கில் திடீர் என தீ பிடித்துள்ளது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து தீ அணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

News image
Updated On :8 ஜனவரி 2014, 6:58 am

தர்மராஜ்

மதுரை மாவட்டம் மேலூர் தெக்கடி பஜாரில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு ஜவுளிக்கடையின் கிடங்கு திருவாதவூர் ரோட்டில் உள்ளது இன்று காலை அந்த கிடங்கில் திடீர் என தீ பிடித்துள்ளது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து தீ அணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து விரைந்து வந்த மேலூர் தீ அணைப்பு துறையினர் மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இந்த விபத்து குறித்து கடை உரிமையாளர் கூறும் போது  இது விபத்து அல்ல குடோனின் ஷட்டர் அடியில் மண்ணெணை ஊற்றி  தீ வைத்துள்ளனர்.

தொழில் போட்டி முன்விரோதம் காரணமாக இது யாரோ செய்த சதி வேலை என்று தெரிவித்தார். இதனால் பல லட்சம் மதிப்புள்ள ஜவுளி பண்டல்கள் நாசம் அடைந்துள்ளன. இதுகுறித்து மேலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாராணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.