தேனிமாவட்டம்,உத்தமபாளையம் அருகில் கோம்பையிலுள்ள புதுக்குளம் கண்மாயில் கரம்பை மண் எடுப்பதற்கு பாஸ் வழங்கப்பட்ட பாஸ் முறைகேடாக பயன்படுத்தி அதிகமான மண்ணை கடத்துவதாக,இப்பகுதி விவசாயிகள் மண் அள்ளிக்க கொண்டிருந்த ஜே.சி.பி மற்றும் கிட்டாச்சி இயந்திரங்களை சிறைப்பிடித்தனர்.
புதுக்குளம் கண்மாயிக்கு ரெங்கநாதன் கோயில் பகுதியிலுள்ள மலை பதியில் மழைக்காலங்களில் பெய்யும் மழைதண்ணீர் ஓடைககல் வழியாகவும்,18-ம் கால்வாய் திறந்துவிடப்படும் தண்ணீயும் இந்த கண்மாயில் தேக்கிவைக்கப்பட்டு இப்பகுதி விவசாயத்திற்கும், அருகிலுள்ள பல்லவராயன்பட்டி,சிந்தலைச்சேரி பகுதியிலுள்ள கண்மாய்க்கும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுவதால் விவசாயசாமும்,நிலத்தடி நீரின் அளவும் பாதுகாக்கப்படுக்றது.
கனிமவளம் அதிகமாக உள்ள புதுக்குளம் சாலைபோடுவதற்கு,செங்காளவாசலுக்கும் தேவையான கரம்பை மற்றும் கிராவல் மண்ணை,பொதுப்பணித்துறை வரையறை செய்யப்பட்டு,தனியார் ஒருவருக்கு கரம்பை,கிராவல் டிரக்டர் மூலமாக அள்ளிச்செல்ல் அனுமதிகொடுக்கப்பட்டதாகவும்,அனுமதிப்பட்ட அளவு மற்றும் அரசின் விதிமுறையை மீறி 5 யூனீடுகள் லாரிகள் மூலமாகவும்,மேலும் 5 அடி ஆழம் வரை தடைசெய்யப்பட்ட ஜே.சி.பி மற்றும் கிட்டாச்சியை பயன்படுத்து நிர்ணையம் செய்யப்பட்ட அளவிற்கு அதிமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதாகவும், இந்த குளத்தை நம்மி பல ஏக்கரில் விவசாயம் செய்யும் விவசாய்களுக்கு நிலத்தின் நீர் மட்டம் அளவு குறையவாய்புள்ளதால்,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.