தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

செருப்பால் அடித்த தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே ஆசிரியரை தாக்கிய தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு

News image
Updated On :9 ஜனவரி 2014, 11:27 am

ராதாகிருஷ்ணன்

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே ஆசிரியரை தாக்கிய தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் வியாழக்கிழமை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரியிடம் மனு அளிக்கப்பட்டது.

மனு விவரம்: அரூர் ஒன்றியத்திற்குள்பட்ட சக்கிலப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.

இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் டி.கலையரசன் என்பவரை, பள்ளித் தலைமை ஆசிரியை ஜ.செல்வராணி கடந்த 6-ஆம் தேதி வகுப்பு நேரத்தில், மாணவர்களின் வருகை மற்றும் தரம் குறித்து அட்டவணையில் குறிப்பிடவில்லை எனக் கூறி வாக்குவாத்தில் ஈடுபட்டாராம். அப்போது, திடீரென மாணவர்கள் முன்னிலை ஆசிரியர் டி.கலையரசனை, தலைமை ஆசிரியை செல்வராணி தனது காலணியால் அடித்தாராம்.

இதை கண்டித்து, ஆசிரியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அரூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.

இதில், நடவடிக்கை எதும் எடுக்கப்படவில்லை எனவும், தலைமை ஆசிரியை மீது துறை ரீதியான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.