விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் இறுதி பட்டியலை வெள்ளிக்கிழமை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டார். இம்மாவட்டத்தில் ஆண்கள்-704512, பெண்கள்-718746 பேரும் என மொத்தம் 14,233,360 வாக்காளர்கள் உள்ளனர்.
இம்மாவட்டத்தில் 1.1.2014 தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப்பணிகள் கடந்த 1.10.2013 முதல் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில், 1.10.2013 முதல் 31.10.2013 தேதி வரையில் பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்ய அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் கோட்டாட்சியர்களின் உத்தரவின் பேரில் வாக்காளர் பட்டியலின் துணைப்பட்டியல் தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்று வந்தது.
குறிப்பிட்ட நாள்களில் நடந்த வாக்காளர் பெயர் சேர்த்தலுக்கு படிவம் 6ல் 72 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு, 68,146 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நீக்கல்(படிவம் 7) 814 மனுக்கள் பெற்று, 806 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. திருத்தம் (படிவம் 8) 11675 பெறப்பட்டு, 10999 மனுக்கள் ஏற்கப்பட்டும், முகவரி மாற்றம் (படிவம் 8எ) 3300 மனுக்களில் 2842 மனுக்களும் ஏற்கப்பட்டன. இறப்பு மற்றும் இடப்பெயர்ச்சி ஆகிய காரணங்களினால் 1635 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திருத்தப்பட்ட வாக்காளர்கள் பட்டியலை ஆட்சியர் வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளிட்டார். அதன் அடிப்படையில் இம்மாவட்டத்தில் ராஜபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் 2,08,755 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர்-211667, சாத்தூர்-207083, சிவகாசி-214554, விருதுநகர்-193579 பேரும், அருப்புக்கோட்டை-192355 பேரும், திருச்சுழி-195367 பேரும் உள்ளனர். இதில், அனைத்து தொகுதியிலும் ஆண் வாக்காளர்கள் 7045512 பேரும், பெண்கள் 718746 பேர்களும், திருநங்கைகளின் வாக்கு 102 ஆகவும் உயர்ந்துள்ளது.
தற்போது நடந்த சுருக்க திருத்த முகாமில் மனு செய்ய விடுபட்டவர்கள் வருகிற 11-ம் தேதி முதல் அந்தந்த வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்களில் நேரில் அளிக்கலாம். அம்மனுக்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை தேர்தல் அலுவலரின் அறிவுரைப்படி வாக்காளர் தொடர் திருத்த பட்டியலில் இடம் பெறுவதற்கு பரிசீலனை செய்யப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். இதில், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.முனுசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கொங்கன், வட்டாட்சியர்(தேர்தல் பிரிவு) நடராஜன், உதவி அலுவலர்கள் ஜெகவீரபாண்டியன், கதிரவன், கணினி வரைவாளர் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

