தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சிதம்பரம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 15 பேர் காயம்!

சிதம்பரம் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அரசு பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்த சாலையில் கவிழ்ந்ததில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 3 பேர் படுகாயமுற்றனர்.

Updated On :13 ஜனவரி 2014, 12:51 pm

சிதம்பரம் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அரசு பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்த சாலையில் கவிழ்ந்ததில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 3 பேர் படுகாயமுற்றனர்.

12 பேர் காயமுற்றனர். சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி திங்கள்கிழமை இரவு பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. சிதம்பரம் அருகே சீயப்பாடி எனுமிடத்தில் வந்து கொண்டிருந்த போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் மணிகண்டன் (37), நடத்துநர் தனவேல் (47), சாராபி என்ற பயணி ஆகிய மூவரும் படுகாயமுற்று சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். முஜ்புர்சுல்தான் 922), அருண்சம்பத் (29), ஜீவரத்தினம் (33), ராம்குமார் (27), சங்கர் (33), ராகுல்ஆசாத் (28), மணிமாறன் (33), பாரதி (25) உள்ளிட்ட 12 பேர் காயமுற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

 இதுகுறித்து புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.