தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சிதம்பரம் அருகே கடலில் மூழ்கி ஒரு மாணவர் சாவு!  காணாமல் போன மற்றொரு மாணவரை தேடி வருகின்றனர்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கடலில் மூழ்கி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். காணாமல் போன மற்றொரு மாணவரை தேடி வருகின்றனர்.

Updated On :13 ஜனவரி 2014, 12:11 pm

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கடலில் மூழ்கி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். காணாமல் போன மற்றொரு மாணவரை தேடி வருகின்றனர்.

சிதம்பரம் துரவடித்தெருவைச் சேர்ந்த திருக்குமரன் (18). இவர் அண்ணாமலைநகர் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளமா இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

இவரும் அதே தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் ஸ்ரீதர் (15),  காயத்திரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவர் கார்த்திக் (18), துரவடித்தெருவைச் சேர்ந்த டிப்ளமா படித்து முடித்துள்ள சதீஷ்குமார் (20) ஆகிய நான்கு பேரும் போகி பண்டிகையை கொண்டாட இரு மோட்டார் சைக்கிளில் திங்கள்கிழமை காலை சிதம்பரம் அருகே உள்ள சாமியார்பேட்டை கடற்கரைக்கு சென்று கடலில் குளித்துள்ளனர்.

அப்போது கடல் அலையில் சிக்கி திருக்குமரன் நீரில் மூழ்கி இறந்தார். அலையில் சிக்கிய மற்றொரு மாணவர் ஸ்ரீதர் காணாமல் போனார். மற்ற இருவரான கார்த்திக், சதீஷ்குமார் ஆகியோர் தப்பி கரையேறினர்.

நீரில் மூழ்கி காணாமல் போன ஸ்ரீதரை தீயணைப்பு மீட்புத்துறையினர் மற்றும் போலீஸார் தேடி வருகின்றனர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.