மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

லாரி மீது அரசு பஸ் மோதல்: 5 பேர் காயம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திங்கள்கிழமை லாரி மீது அரசு பஸ் மோதியதில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

Updated On :13 ஜனவரி 2014, 12:25 pm

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திங்கள்கிழமை லாரி மீது அரசு பஸ் மோதியதில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

மதுரை-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், அழகாபுரியை அடுத்துள்ள வலையபட்டி விலக்கு அருகே முன்னல் சென்று கொண்டிருந்த லாரி மீது, பின்னால் ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு போக்குவரத்துக் கழக பஸ் மோதியது.

இதில் கூடங்குளம், நாதன்தோட்டத்தைச் சேர்ந்த கண்ணன் மனைவி ஜெயகுமாரி (27), பெருமாள் மனைவி பேச்சியம்மாள் (65), பஸ் நடத்துனர் மு.குப்புசாமி (42), பா.நாகராஜ் (37), லாரி டிரைவர் வெ.அழகர் (50) ஆகியோர் பலத்த காயம் அடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இது குறித்து ஜெயகுமாரி, நத்தம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த நே.தினேஷ்குமாரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.