6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேலூரில் மக்கள் குறை கேட்டார் அழகிரி

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி இன்று மதுரை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட மேலூரில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.

News image
Updated On :16 ஜனவரி 2014, 9:21 am

தர்மராஜ்

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி இன்று மதுரை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட மேலூரில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.

கம்பம் நகர செயலாளர் ஈஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சத்திய சாய் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். இதையடுத்து மதுரை கிழக்கு ஒன்றிய திமுக செயலர் இல்லத்தில் அழகிரி ஆதரவாளர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.

இதை தொடர்ந்து இன்று மேலூரில் உள்ள எம்.பி. அலுவலகத்துக்கு காலையில் வந்த அழகிரி மக்கள் குறை கேட்பு கூட்டம் நடத்தினார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் திமுகவினர் எம்.பி. அலுவலகம் முன் திரண்டனர். சுமார் 1 மணி நேரம் பொது மக்களைடம் இருந்து  பல்வேறு குறைகளை கேட்ட அவர் மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி தனது மக்களவை தொகுதியில் குறைகளை கேட்டு அதற்கான நடவடிக்க்கை எடுக்க உரிய துறைகளுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தெரிவித்தார். மேலும் 6 சட்ட மன்ற தொகுதிகளிலும் சென்று மக்களின்குறைகளை கேட்டு மனுக்களை பெற உள்ளதாக அழகிரியின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.