சிதம்பரத்தில் இந்து அறநிலையத்துறையினரால் நடைபெற்று வரும் ஸ்ரீஅனந்தீஸ்வரர் கோயில் திருப்பணியில் பல்வேறு குறைபாடுகள் மற்றும் முறைகேடுகளினால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என திமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினரும், கோயில் முன்னாள் நிர்வாக அறங்காவலருமான சிவா.கண்ணதாசன் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கடிதத்தில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் ஆயிரம் தலை கொண்ட பதஞ்சலி முனிவர் வழிபட்ட ஸ்ரீஅனந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் திருப்பணிக்காக தமிழக அரசால் ரூ.73 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஓராண்டாக திருப்பணி பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு ஒதுக்கிய ரூ.73 லட்சம் செலவாகிவிட்டதாகவும், கூடுதலாக அரசு நிதி ஒதுக்கீடு செய்தால்தான் திருப்பணி பணிகள் தொடரும் என வேலைகளை அறநிலையத்துறை பொறியாளர் ஆகியோரின் ஒப்புதலின் பேரில் ஒப்பந்தகாரர் நிறுத்தி வைத்துள்ளார். இதனால் கடந்த 2 மாதங்களாக திருப்பணி பணிகள் நடைபெறவில்லை. இக்கோயிலுக்கு 79.24 ஏக்கர் நன்செய் நிலங்களும், 26.54 ஏக்கர் புன்செய் நிலங்களும் உள்ளன. மேலும் மனைகள் மூலமாக மாதவாடகை வருமானமும் உள்ளது.
வருமானம் அதிகமாக உள்ள கோயில் என்பதால் 2001-ம் ஆண்டு கோயிலுக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டார். 2004-ம் ஆண்டு அவர் பதவி உயர்வு பெற்று மாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னர் கடந்த 9 ஆண்டுகளாக தில்லைக்காளியம்மன் கோயில் நிர்வாக அதிகாரி பொறுப்பில் உள்ளது இக்கோயில். எனவே சிதம்பரம் ஸ்ரீஅனந்தீவரர் கோயிலுக்கு அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி ஒருவரை நியமனம் செய்து திருப்பணிகளை தரமான முறையில் முடித்து குடமுழுக்கு செய்ய முதல்வர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் சிவா.கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


