நெல்லை அருகே காவல்நிலையம் முற்றுகை, மறியல்
திருநெல்வேலி அருகே சிவந்திபட்டியில் பொங்கல் பண்டிகையையொட்டி யாதவர் சமுதாயத்தினர் யாதவ மகாசபை தலைவர் தேவநாதன், கிருஷ்ணன் படங்களுடன் பிளக்ஸ் போர்டு வைத்திருந்தனராம்.


திருநெல்வேலி அருகே யாதவர் சமுதாய பிளக்ஸ் போர்டு தீ வைக்கப்பட்டதை கண்டித்து காவல்நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி அருகே சிவந்திபட்டியில் பொங்கல் பண்டிகையையொட்டி யாதவர் சமுதாயத்தினர் யாதவ மகாசபை தலைவர் தேவநாதன், கிருஷ்ணன் படங்களுடன் பிளக்ஸ் போர்டு வைத்திருந்தனராம். வியாழக்கிழமை இரவு இந்த பிளக்ஸ் போர்டு தீ வைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.தகவலறிந்த அப்பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை காவல் நிலையம் முன்பு பிரதான சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பிளக்ஸ் போர்டுக்கு தீ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர்கள், சிவந்திபட்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். சிவந்திபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...