தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

காணும்பொங்கல்: சிதம்பரம் ஸ்ரீநடராஜர்கோயிலில் திரண்ட மக்கள்!

காணும் பொங்கலை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீநடராஜர்கோயிலில் வியாழக்கிழமை சிதம்பரத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள்  திரண்டனர்.

News image
Updated On :17 ஜனவரி 2014, 7:37 am

காணும் பொங்கலை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீநடராஜர்கோயிலில் வியாழக்கிழமை சிதம்பரத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள்  திரண்டனர்.

காணும் பொங்கலை முன்னிட்டு சிதம்பரத்தை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வியாழக்கிழமை காலை முதல் சாப்பாடு செய்து கொண்டு நடராஜர் கோயிலுக்கு வந்த வன்னம் இருந்தனர்.

பின்னர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். கோயில் வளாகத்தில் பெண்கள் பங்கேற்ற சிலம்பாட்டம், கோலாட்டம், கும்மியடித்தல் மற்றும் கபடி, கோ-கோ விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு கிராமிய விளையாட்டுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதே போன்று சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் மாங்குரோவ் காடுகளை படகு மூலம் சுற்றிப் பார்க்க திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

வெளிமாவட்டங்களிலிருந்து கார், வேன்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வந்து படகு சவாரி செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.