சிதம்பரம் மதுக்குடிக்க பணம் தர மறுத்த மூதாட்டியை கொலை செய்த விசாரணை கைதி மர்மமான முறையில் இறந்தார்.
சிதம்பரம் அருகே வரகூர்பேட்டையை சேர்ந்தவர் வள்ளியம்மாள்(65). வியாழக்கிழமை மாலை வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த இவரிடம், அருகில் உள்ள வீட்டில் குடியிருக்கும் சக்திவேல்(30) பணம் கேட்டாராம். மது குடிக்க பணம் தர முடியாது என வள்ளியம்மாள் மறுத்துவிட்டாராம். அப்போது இருவருக்கும் இடையே வாய்தகாராறு ஏற்பட்டதாம்.
அப்போது வள்ளியம்மாளை, சக்திவேல் கத்தியால் குத்திவிட்டு தப்பியோட முயன்றாராம். அருகில் இருந்தவர்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். பலத்த காயமடைந்த வள்ளியம்மாள், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் அவர் வெள்ளிக்கிழமை காலை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மர்மமான முறையில் இறந்தார். பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

