பைக் மோதி மூதாட்டி சாவு
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொவளைவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியம்மாள்(62). இவர் சனிக்கிழமை இதே கிராமத்தில் உள்ள இவரது மகன் செல்வராஜின் மளிகை கடைக்குச் சென்று


வந்தவாசி அருகே பைக் மோதியதில் நடந்து சென்ற மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொவளைவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியம்மாள்(62). இவர் சனிக்கிழமை இதே கிராமத்தில் உள்ள இவரது மகன் செல்வராஜின் மளிகை கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது இதே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்(25) என்பவர் ஓட்டிவந்த பைக் இவர் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த கன்னியம்மாள் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கன்னியம்மாள் சனிக்கிழமை இரவு இறந்தார். இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகாரின்பேரில் வநத்வாசி வடக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...