விருதுநகர் அருகே குடிபோதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவரை போலீஸார் கைது செய்தனர். விருதுநகர் அருகே சின்னப்பேராளியைச் சேர்ந்தவர் ரமேஷ்(30). இப்பகுதியில் கொத்தனராக வேலைபார்த்து வருகிறார்.
இவரது மனைவி கச்சம்மாள்(29). நாள்தோறும் வேலை செய்யும் பணத்தில் குடித்து விட்டு வீட்டிற்கு வருவராம். இது தொடர்பாக இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இதேபோல், சனிக்கிழமை இரவும் அதிகமாக குடித்து வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, ஆத்திரம் அடைந்த நிலையில் அருகில் கிடந்த கட்டையை எடுத்து தலையில் தாக்கியுள்ளார். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

