தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மணப்பாறை அருகே பட்டப்பகலில் ஆயுதங்களுடன் காரை வழி மறித்து 10 லட்சம் கொள்ளை:

மணப்பாறை அடுத்த வீரப்பூர் அருகே பட்டப்பகலில் ஆயுதங்களுடன் காரை வழி மறித்து 10 லட்சம் கொள்ளை போனது. கொள்ளையர்களைப் பிடிக்க டி.எஸ்.பி. தலைமையில் தனிப்படை

News image
Updated On :20 ஜனவரி 2014, 2:32 pm

கிருஷ்ணமூர்த்தி

மணப்பாறை அடுத்த வீரப்பூர் அருகே பட்டப்பகலில் ஆயுதங்களுடன் காரை வழி மறித்து 10 லட்சம் கொள்ளை போனது. கொள்ளையர்களைப் பிடிக்க டி.எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சீ.எம். பாளையம், நடுவப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல். இவருடைய மகன் பழனிராஜா, வயது 30, இவர் நகை வியாபாரி. இவருடன் அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அருண்ராஜா, வயது 30, இவர்களின் நண்பர் பிரசாத் என்பவர் குறைந்த விலையில் தங்க நகைகள் கிடைப்பதாகவும் அதற்குரிய பணத்தை எடுத்து வருமாறும் கூறினார்

இதனைதொடர்ந்து பழனிராஜா, அருண்ராஜா மற்றும் கடலூரைச் சேர்ந்த டிரைவர் கார்த்தி வயது 27 என்பவரின் வாடகை காரில் மூவரும் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குளித்தலை பிரிவு சாலைக்கு வந்தனர்.

அப்போது அங்கு வழி மறித்து 6 பேர் கொண்ட கும்பல் டாடா சுமோவில் வந்து காரையும் கடத்தினர். வையம்பட்டி அடுத்த வீரப்பூர் அருகே உள்ள மத்தக்கோடங்கிபட்டி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மூவரையும் இறக்கிவிட்டு அவர்களின் காரில் வைத்திருந்த 10 லட்சத்தையும், கார் சாவியையும் பறித்துச் சென்றனர்.

மூவரும் சத்தம் போட்டதையடுத்து கிராம மக்கள் சுமோவைப் பிடிக்க முயற்சித்தனர். சுமோ மின்னல் வேகத்தில் சென்றதையடுத்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் மணப்பாறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணேசன், ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணத்தைப் பறி கொடுத்த மூவரையும் விசாரணை செய்தனர்.

பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைப் பிடிக்க டி.எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பட்டப் பகலில் நடந்ததால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.