சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்குள் தனிக்கோயிலாக அமைந்துள்ள ஸ்ரீபாண்டியநாயகர் கோயில் காஞ்சி சங்கர மடம் சார்பில் ரூ.4 கோடி செலவில் திருப்பணி செய்து குடமுழுக்கு செய்யப்படும் என காஞ்சிமட பீடாதிபதி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வருகை தந்த ஸ்ரீஜயேந்திரரை பொதுதீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து மேளதாளத்துடன் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் சிற்றம்பலமேடையில் ஏறி ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியை தரிசனம் செய்தார். பொதுதீட்சிதர்கள் சிறப்பு அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்து பிரசாதம் அளித்து பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.
அடுத்து ஸ்ரீதில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில், ஸ்ரீசிவகாமிஅம்மன் கோயில் ஆகியவற்றிற்கு சென்று ஜயேந்திரர் சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக திருப்பணிக்காக இடிக்கப்பட்டுள்ள ஸ்ரீபாண்டிய நாயகர் கோயில் என்கிற வள்ளி தெய்வானை உடனாகிய மயில் மீதமர்ந்த சண்முகர் கோயிலுக்கு சென்று கோயில் திருப்பணி செய்வது குறித்து பார்வையிட்டார். பின்னர் வள்ளி, தெய்வானை சமேத சண்முகரை தரிசனம் செய்தார். ஜயேந்திரருடன் ஆடிட்டர் கே.வைத்தியநாதன், தொழிலதிபர் எஸ்.ஆர்.ராமநாதன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஸ்ரீநடராஜர் கோயிலில் தனிக்கோயிலாக உள்ள ஸ்ரீபாண்டிய நாயகர் கோயில் காஞ்சி சங்கர மடம் சார்பில் ரூ.4 கோடி செலவில் முழுமையாக திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தப்படும். கோயிலை தீட்சிதர்கள் நிர்வகிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தீட்சிதர்கள் நல்லவர்கள், தீர்ப்பினால் சந்தோஷமாக உள்ளனர். 3 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்குபவர்களுக்கு காஞ்சி சங்கர மடம் சார்பில் அங்கு கட்டடங்கள் கட்டி வேதபாடசாலை மற்றும் பள்ளி அமைத்து தரப்படும் என ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


