மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

லாரி மீது வேன் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சாவு

மதுரை அருகே நின்றிருந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.

News image
Updated On :26 ஜனவரி 2014, 7:24 am

தர்மராஜ்

மதுரை அருகே நின்றிருந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.

சென்னை திருவல்லிகேனியை சேர்ந்தவர் ஜமால் மைதீன் (வயது60).இவரது மனைவி லைலா (55). இவர்களது மகன்கள் சையது சுலைமான் (35), அப்துல் ரசாக் (27). அப்துல் ரசாக்கின் மனைவி ஹாமிலா பேகம் (25). லைலாவின் உறவினர் திருமணம் மதுரையில் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள ஜமால் மைதீன், அவரது மனைவி லைலா, மகன்கள் சையது சுலைமான், அப்துல் ரசாக் மற்றும் உறவினர்கள் 14 பேர் ஒரு வேனில் நேற்று இரவு மதுரை புறப்பட்டனர்.

இந்த வேன் மதுரை மாவட்டம் மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் மனப்பட்டி என்ற இடத்தில் வேன் வந்த போது திடீரென்று சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜமால் மைதீன், லைலா, சையது சுலைமான் ஆகியோர் உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். தலையில் பலத்த காயமடைந்த அப்துல் ரசாக் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில் இறந்து விட்டார்.

இந்த விபத்தில் ஹாமிலா பேகம், தைபிக் (5), தாரிக் (3), அசன் பாத்திமா (50), அப்துல் ரகுமான் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அசன் பாத்திமா இறந்தார். இவ்விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.