காந்தியடிகள் நினைவு தினமான சர்வோதய தினத்தை முன்னிட்டு சிதம்பரம் வாகீசநகரில் உள்ள காந்திமன்றத்தில் சர்வசமய பிரார்த்தனை வியாழக்கிழமை நடைபெற்றது.
மன்றச் செயலர் பொன்.குஞ்சிதபாதம் தலைமை வகித்தார். காமராஜ் கல்வி குழுமத் தலைவர் சி.ஆர்.லட்சுமிகாந்தன் முன்னிலை வகித்தார். சர்வ சமய பிரார்த்தனையில் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
பிராத்தனையில் கீதை, குர்ரான், பைபிள் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள் படிக்கப்பட்டன. ரகுபதி ராகவ ராஜாராம், ராமபஜனை, சாந்திநிலவ வேண்டும் உள்ளிட்ட பாடல்களை மாணவ, மாணவியர்கள் பாடினர். மன்றச் செயற்குழு உறுப்பினர் வி.முத்துக்குமரன் நன்றி கூறினார். முன்னதாக சிதம்பரம் பஸ்நிலையம் அருகே உள்ள காந்திசிலைக்கு காந்திமன்றத்தில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற மைசூர் ஹிந்த பயிற்சி மைய மண்டல இயக்குநர் மு.ஞானம், ஆசிரியர் முத்துக்குமரன், மன்ற உறுப்பினர்கள் பெரி.முருகப்பன், ச.சீனுவாசன், எம்.கமல்கிஷோர்ஜெயின், காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கத் தலைவர் சி.சமுத்திர ராஜகுமார், கேசினோ ஜி.முரளிதரன், பி.விஷால்ஜெயின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

