சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தை அமாவாசையை முன்னிட்டு தச தீர்த்தங்களில் தீர்த்தவாரி உற்சவம் வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
முறையே சிவகங்கை(கோயிலினுள்), கிள்ளை (கடற்கரை), புலிமடு (சக்தி நகர் அம்மாபேட்டை), வியாக்ர தீர்த்தம் (இளமையாக்கினார் கோயில்), அனந்த தீர்த்தம் (அனந்தீஸ்வரன் கோயில்), நாகச்சேரி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் (சிங்காரத்தோப்பு), சிவப்ரியை தீர்த்தம் (தில்லையம்மன் கோயில்), திருப்பாற்கடல் தீர்த்தம் (பர்ணசாலை), பரமானந்த கூடம் (சித்சபை அருகே உள்ள ஸ்ரீ நடராஜர் அபிஷேக தீர்த்த கிணறு) ஆகிய தச தீர்த்தங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
தீர்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு வியாழக்கிழமை காலை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீசந்திரசேகரர் (ஸ்ரீநடராஜர்) கோயிலிருந்து புறப்பட்டு தச தீர்த்தகங்களுக்கு சென்றார். தத தீர்த்தங்களில் ஸ்ரீநடராஜப்பெருமான் முன்னிலையில் சுவாமியின் பிரதிநிதியான அஸ்திரராஜர் நீரில் மூழ்கி பக்தர்களுக்கு தீர்த்தவாரி காட்சியளித்தார். திரளான பக்தர்கள் தீர்த்தவாரி உற்சவத்தை கண்டு தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர். தீர்த்த குளங்களை தூர்வாரி தீர்த்தவாரி உற்சவத்திற்கு பொதுதீட்சிதர்களுக்கு உதவியாக இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் உதவிகளை செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


