தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2-வது யூனிட்டில் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2-வது யூனிட்டில் புதன்கிழமை திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிகப்பட்டது. பாராமரிப்பு பணிக்காக உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4-வது

News image
Updated On :2 ஜூலை 2014, 10:34 am

இன்பராஜ்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2-வது யூனிட்டில் புதன்கிழமை திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிகப்பட்டது. பாராமரிப்பு பணிக்காக உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4-வது யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கியது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் நாள்தோறும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு, அடிக்கடி ஏற்படும் பழுது காரணமாக மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், 2-வது யூனிட்டில் புதன்கிழமை காலை 9 மணியளவில் கொதிகலனில் ஏற்பட்ட பஞ்சர் காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த பழுதை சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் வியாழக்கிழமை இரவுக்குள் இந்த பணிகள் முடிவடைந்துவிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே,  பராமரிப்பு காரணமாக கடந்த மே மாதம் 25 ஆம் தேதி முதல் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நன்காவது யூனிட்டில் புதன்கிழமை பிற்பகலில் இருந்து மின் உற்பத்தி தொடங்கியது. இதனால், அனல் மின் நிலையத்தில் புதன்கிழமை இரவு நிலவரப்படி ஏறத்தாழ 800  மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.