மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

லாரி மீது ஆம்னி பேருந்து மோதல்: ஒட்டுநர்கள் 2 பேர் சாவு

சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சரக்கு ஏற்றிக்கொண்டு வந்த லாரியின் டயர் பஞ்சர் ஆனதால் சிறுகனூர் அருகேயுள்ள பி.கே.அகரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டு இருந்தது. அப்போது

News image
Updated On :5 ஜூலை 2014, 9:44 am

ராஜேஷ் கண்ணன்

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே நின்றுகொண்டிருந்த சரக்கு லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் பஸ் டிரைவர்கள் இருவர் சனிக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சரக்கு ஏற்றிக்கொண்டு வந்த லாரியின் டயர் பஞ்சர் ஆனதால் சிறுகனூர் அருகேயுள்ள பி.கே.அகரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டு இருந்தது. அப்போது சென்னையிலிருந்து அறந்தாங்கி நோக்கி வந்த தனியார் ஆம்னி பேருந்து வேகமாக வந்து கொண்டிருந்தது. சாலையின் ஒரமாக நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது ஆம்னி பேருந்து வேகமாக மோதியதில் பேருந்து ஒட்டுநர்கள் சென்னையைச் சேர்ந்த திலிப்குமார் (35), மற்றொரு டிரைவர் பவானி பகுதியினைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 6 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீஸ் ஆய்வாளர் மன்னர் மன்னன் வழக்கு பதிந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.