பெட்ரோல் பங்கு மேலாளரிடம் ரூ.10 லட்சம் வழிபறி
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், கல்லக்குடியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கு மேலாளர் வங்கியில் செலுத்த சென்ற ரூ.10 லட்சம் பணத்தினை கொள்ளையர்கள் திங்கள்கிழமை வழிமறித்து கொள்ளையடித்து


திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், கல்லக்குடியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கு மேலாளர் வங்கியில் செலுத்த சென்ற ரூ.10 லட்சம் பணத்தினை கொள்ளையர்கள் திங்கள்கிழமை வழிமறித்து கொள்ளையடித்து சென்றனர்.கல்லக்குடி அருகே திமுக பிரமுகருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்கின் மேலாளராக கல்லக்குடி பழனியாண்டிநகர் அருகேயுள்ள அன்பில் நகரில் வசிக்கும் சின்னசாமி மகன் கிருஸ்ணமூர்த்தி (65) நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார். பெட்ரோல் பங்கில் கிடைக்கும் பணத்தினை கல்லக்குடியில் உள்ள அரசு பொதுவுடைமை வங்கியில் செலுத்தி வருவது வழக்கமாம்.
வங்கியில் பணம் செலுத்தும் நபர் திங்கள்கிழமை வராததால் பங்க் மேலாளரே தனது மோட்டார் சைக்கிளில் ரூ.10 லட்சத்தினை எடுத்துச் சென்றார். அப்போது தாப்பாய் சாலை அருகே சென்ற போது மொபட்டில் 2 பேர் எதிரே வந்த அவர்கள் மேலாளரின் மொபட்டினை தள்ளிவிட்டு, மொபட்டில் வைத்திருந்த ரூ.10 லட்சம் ரொக்கத்தினை கொள்ளையடித்துச் சென்றனர்.
இச் சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி, லால்குடி துணை கண்காணிப்பாளர்அசோகன், லால்குடி காவல் ஆய்வாளர் செல்வராசா ஆகியோர் வந்திருந்தனர். இச் சம்பவம் குறித்து கல்லக்குடி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...