சேலம் விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 7) பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் வி.ஆர்.ராஜேந்திரன், பதிவாளர் ஒய்.ஆபிரகாம் ஆகியோர் சேலத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
சேலம் அரியானூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழா அண்ணபூரணா கலையரங்கில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில், மருத்துவம், பல் மருத்துவம், ஹோமியோபதி, மருந்தியல், முடநீக்கியல், செவிலியர், பொறியியல், கல்வியியல், கலை-அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் படித்து முடித்த 2,972 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள், பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த விழாவில் கே.கே.ஆர். மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் கே.கே.ராமலிங்கம் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கிப் பேசுகிறார். இந்த விழாவில், அன்னபூரணி சண்முகசுந்தரம், விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத் துணைத் தலைவர் சரவணன், சதீஷ்குமார், சந்திரசேகர், இயக்குநர்கள் காமாட்சி, அனுராதா, சுமதி, அருணாதேவி, ஜெகந்நாதன், ராமசாமி உள்ளிóட்டோர் கலந்து கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
பேட்டியின்போது, மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயபால், இயக்குநர் உத்தலிங்கம், மருந்தியல் கல்லூரி முதல்வர் ஜெய்கர், பொறியியல் கல்லூரி முதல்வர் நாகப்பன், இணைப் பதிவாளர் தனசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.