அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் அருகே மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த கணவருக்கு ஆயுள்

விருதுநகர் அருகே மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் நீதிமனறம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Updated On :9 ஜூலை 2014, 12:30 pm

விருதுநகர் அருகே மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் நீதிமனறம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு அருகே தோனுகால் கிராமத்தைச் சேர்ந்த கருப்பணன் என்பவரின் மகன் குருநாதன்(28). இவரது மனைவி பாண்டீஸ்வரி(25). இவர் அடிக்கடி மதுக்குடித்து வந்து மனைவியுடன் தகராறு செய்வராம். இதேபோல் கடந்த 26.10.2012 அன்று அளவுக்கு மீறி மதுக்குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். பின்னர் தகராறு முற்றியதில் குருநாதன் சமையலுக்கு வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து மனைவி பாண்டீஸ்வரியின் மீது ஊற்றி தீ வைத்தாராம்.

இதில் படுகாயம் அடைந்த பாண்டீஸ்வரியை உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை ராஜாஜி மருத்துமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 1.11.2012 அன்று சிகிச்சை பலனின்றி பாண்டீஸ்வரி உயிரிழந்தார். இது தொடர்பாக பாண்டீஸ்வரியின் தாயார் மாலையம்மாள் மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இது தொடர்பான வழக்கு விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்டாலின் செல்வராஜ், மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த குற்றத்திற்காக குருநாதனுக்கு ஆயுள்தண்டையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.